/* */

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரிக்கை

உய்யக்கொண்டான்- கட்டளைக் கால்வாய் பாசனமின்றி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரிக்கை

HIGHLIGHTS

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரிக்கை
X

கால்வாயில் தண்ணீர் வராததால் வறண்டு கிடக்கும் நிலப்பரப்பு

உய்யக்கொண்டான்- கட்டளை கால்வாய் பாசனமின்மையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் இருபதாயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (சிபிஐ) தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.இராமச்சந்திரன் விடுத்துள்ள கோரிக்கை: தஞ்சாவூர் செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான கிராமங்களுக்கு விவசாயத்திற்கு உரிய தேவையான நீர் உய்யக்கொண்டான் மற்றும் கட்டளைக் கால்வாய் நீரை நம்பித்தான் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு உய்யக்கொண்டான், கட்டளை கால்வாயில் நீர்வரத்து அதிகம் இல்லாதாலும், மழை நீர் போதிய அளவு இல்லாமையாலும் சாகுபடி பாதித்தது. அதே போல் இந்த ஆண்டும் சரிவர நீர் வரத்து இல்லாததால் குறுவைப் பயிர்கள் பாதித்துள்ளன.

நடப்பு சம்பா சாகுபடியும் 100 சதவீதம் பாதித்துள்ளது. தஞ்சை மாவட்ட நிர்வாகம், வருவாய் அலுவலரைக் கொண்டு தஞ்சாவூர், செங்கிப்பட்டி, பூதலூர் வருவாய் சரகத்திற்கு உட்பட்ட உய்யக்கொண்டான், கட்டளை கால்வாய் பாசனத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை கணக்கீடு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 20000 ம் இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் கல்லணை யிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்குள் உள்ள உய்யக்கொண்டான் மற்றும் கட்டளைக்கு கால்வாய்க்கு உரிய நீரை கல்லணையிலிருந்து கொண்டு வருவதற்கு புதிய பாசன திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்த தமிழ்நாடு அரசும் தஞ்சை மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலவச மின்சாரத்திற்கு விவசாயிகள் விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். உரிய காலத்தில் சாகுபடி செய்வதற்கு உதவியாக இவர்களுக்கு உடனடியாக இலவச மும்முனை மின்சாரம் வழங்க தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்.இராமச்சந்திரன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 14 Dec 2023 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!