/* */

தஞ்சை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்விளக்க மையம் ஆ.ய்வு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் வரை செயல்பட உள்ளது

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்விளக்க  மையம் ஆ.ய்வு
X

தஞ்சை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கம் மையத்தில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செயல்முறை விளக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டார்.

தஞ்சை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கம் மையத்தில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செயல்முறை விளக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுலக வளாகத்தில் பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கம் மையத்தில் (EVMDemonstration Center) வாக்காளர்கள் வாக்குப்பதிவு செயல்முறை விளக்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் இன்று நேரில் பார்வையிட்டார்.

இம்மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது எவ்வாறு நாம்செலுத்திய வாக்கினை யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்த்து அறிந்து கொள்வது குறித்தும் வாக்காளர்கள் வாக்குப் பதிவு செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.மேலும் இம் மையம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் வரை செயல்பட உள்ளது. வாக்காளர்கள் இந்த செயல் முறை விளக்க மையத்தினை பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தங்களுடைய சந்தேகங் களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த செயல் முறை விளக்க மையம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் செயல்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள்... மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் (electronic voting machine) சில நாடுகளில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் வாக்கைப் பதிவு செய்ய நடைமுறையில் இருக்கும் கருவியாகும். பதிவான தகவல்களைச் சேமித்து வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வெளிக்காட்டும் இயந்திரமாகும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM என்றும் அழைக்கப்படுகிறது ) என்பது மின்னணு வழிமுறைகளைப் பயன்படுத்தி வாக்களிப்பது மற்றும் வாக்குகளை எண்ணுவது போன்ற வேலைகளுக்கு உதவுவது அல்லது கவனித்துக்கொள்வதாகும்.

EVM இரண்டு அலகுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது: கட்டுப்பாட்டு அலகு மற்றும் வாக்குப்பதிவு அலகு . இந்த அலகுகள் ஒரு கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. EVM- ன் கட்டுப்பாட்டு அலகு தலைமை அதிகாரி அல்லது வாக்குச் சாவடி அதிகாரியிடம் வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குப் பதிவு அலகு வாக்குப் பெட்டிக்குள் வைக்கப் பட்டுள்ளது.

வாக்குச் சாவடி அலுவலர் உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது. EVM உடன் , வாக்குச் சீட்டை வழங்குவதற்குப் பதிலாக, வாக்குச் சாவடி அலுவலர், வாக்காளர் வாக்களிக்கச் செய்யும் வாக்குச் சீட்டு பொத்தானை அழுத்துவார். வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும்/அல்லது சின்னங்களின் பட்டியல், அதற்கு அடுத்ததாக நீல நிற பட்டனுடன் இயந்திரத்தில் கிடைக்கும். வாக்காளர் தாங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு அடுத்துள்ள பட்டனை அழுத்தலாம்.

Updated On: 23 Dec 2023 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்