/* */

பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தஞ்சையில் நடைபெற்ற ஏ ஐ டி யூ சி ஆட்டோ சங்க பேரவை கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
X

தஞ்சையில் நடைபெற்ற மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் 13 -ஆவது பேரவை கூட்டம்

பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டுமென தஞ்சையில் நடைபெற்ற ஏ ஐ டி யூ சி ஆட்டோ சங்க பேரவை கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.

தஞ்சை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் 13 -ஆவது பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்ட ஏ ஐ டி யூ சி கூட்டரங்கத்தில் சங்கத் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. பேரவை கொடியினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன் ஏற்றிவைத்தார். மாநகர செயலாளர் கே.ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஏ ஐ டி யூ சி மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம் பதிமூணாவது பேரவையை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சங்க மாவட்ட செயலாளர் இரா.செந்தில்நாதன் வேலை அறிக்கை முன் வைத்தார்.பொருளாளர் ஆர்.மலைச்சாமி வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

பேரவையினை வாழ்த்தி ஏஐடியூசி சி மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்டத் துணைச் செயலாளர் துரை. மதிவாணன், மாவட்ட துணை தலைவர் ஆர்.பி. முத்துக்குமரன் ஆகியோர் பேசினார்கள். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் க.அன்பழகன் பேரவையினை நிறைவு செய்து உரையாற்றினார். முடிவில் மாநகரத் தலைவர் எஸ்.ரமேஷ் நன்றி கூறினார்.

பேரவைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும்,ஆட்டோ களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும்,ஆட்டோ தொழிலை பாதிக்கின்ற ஓலா - ஊபர் ஆட்டோக்களை தடை செய்ய வேண்டும், ஆட்டோ நல வாரியத்தை பாதுகாக்க வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனையும்,வீடும் கட்டித் தரப்பட வேண்டும், நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்ற விளைவாக பெட்ரோல், டீசல்,எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்துவதுடன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்டு விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும், தஞ்சை மாநகரில். உள்ள 51 வார்டுகளிலும் குண்டு குழியுமான தெருக்களை சரி செய்ய வேண்டும்,மழைக்காலம் தீவிரமாவதற்குள் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த 2021 - -ஆம் ஆண்டில் இந்தியாவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கொரோனா உயிரிழப்பு; பெட்ரோல், டீசல் விலை உயர்வு. தற்போது கொரோனா உயிரிழப்பும் நோய்த்தொற்றுப் பரவலும்கூட குறைந்துவிட்டன. ஆனால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் உள்ள சாமானிய மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக, இந்தியாவின் தலைநகர் டெல்லி முதல் மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, தமிழ்நாடு எனப் பெரும்பாலான மாநிலங்களில் வரை பெட்ரோல் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 4-ம் நாள் தொடங்கி இரண்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை 38 முறை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 10.51 ரூபாய் அளவுக்கும், ஒரு லிட்டா் டீசல் விலை 9.15 ரூபாய் அளவுக்கும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரையில் சுமார் 60 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Updated On: 16 Oct 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்