/* */

தென்காசியில் அமைச்சர் வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்

தென்காசியில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் அமைச்சர் வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்
X

தென்காசியில் அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சாலை விதிகளை மீறியதாக 16,400 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னையை விட தென்காசி மாவட்டத்தில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தென்காசியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு கூறினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப்யாதவ் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், சாலை பாதுகாப்பு குறித்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. கூட்டத்தில் அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உரையாற்றினர்.

இதனைதொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகள் மத்தியில் பேசும்போது, தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இன்மை காரணமாக ஒரு சில இடங்களில் விபத்துக்கள் அரங்கேறி வருகிறது.

குறிப்பாக, விபத்துக்களை தடுக்க தமிழக அரசின் பல்வேறு சாலை பாதுகாப்பு சட்டங்களை காவல்துறையினர் முறையாக கடைபிடித்து சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், இதுவரை தமிழகத்தில் சாலை விதிகளை மீறியதாக 16,400 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 4 ஆயிரம் பேர் செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கியவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதில் குறிப்பாக சென்னையை விட தென்காசி மாவட்டத்தில் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

Updated On: 24 May 2023 1:41 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்