/* */

டிச.20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி? குழப்பத்தில் சுற்றுலா பயணிகள்

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஆட்சியர் அனுமதி அளித்ததாக சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

டிச.20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி? குழப்பத்தில் சுற்றுலா பயணிகள்
X

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் டிச.20ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அருவிகள், சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஆட்சியர் அனுமதி அளித்ததாக சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.


அதில் பேரருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் குளிக்க அனுமதி. ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. பழைய குற்றால அருவியில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் குளிக்க அனுமதி. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியரின் கையொப்பம் பெறப்படவில்லை. மேலும் இதுதொடர்பாக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு முறையான தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Updated On: 7 Dec 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  3. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  4. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  5. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  6. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  7. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...