/* */

கல்லூரணி ஊராட்சி கிராம சபை கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் கல்லூரணி ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.கோபாலசுந்தரராஜ் பங்கேற்றார்.

HIGHLIGHTS

கல்லூரணி ஊராட்சி கிராம சபை கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
X

தென்காசி மாவட்டம் கல்லூரணி ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.கோபாலசுந்தரராஜ் பங்கேற்றார்.

கீழப்பாவூர் ஒன்றியம், கல்லூரணி ஊராட்சி குருசாமிபுரத்தில் மே தினத்தையொட்டி கிராமசபைக்கூட்டம் (01.05.2022) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ச.கோபாலசுந்தரராஜ் கலந்து கொண்டார் .

இக்கூட்டத்தில், 2021-22 ஆம் ஆண்டுக்கான ஊராட்சி வரவு, செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுத் திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு. அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சித் திட்டங்கள், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் முன் மாதிரி கிராம ஊராட்சி விருதுக்கு தயார் செய்தல், கிராம வளர்ச்சிக்கு தேவையான பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது

இக்கூட்டத்தில் கீழப்பாவூர் ஒன்றியக்குழு தலைவர் திருமதி. சீ.காவேரிசீனித்துரை, ஊராட்சி மன்ற தலைவர் திரு .ராஜ்குமார், துணைத்தலைவர் திரு .குமார், மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சாக்ரடீஸ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) திரு. பிரான்சிஸ் சேவியர் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகையா, முருகன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் பதில் அளித்தனர். முடிவில் ஊராட்சிச் செயலர் ஜெயசிங் ராஜன் நன்றி கூறினார்.

Updated On: 2 May 2022 1:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  2. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  3. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  4. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  7. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  8. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  9. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  10. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது