/* */

அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு

அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார்.

HIGHLIGHTS

அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
X

பொது உடமை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவி நாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.

திமுகவையும், பாஜகவையும் எதிர்க்கும் சக்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் இருப்பதாகவும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது தற்போது உள்ள வெறுப்பால் அவரது வாக்கு சதவீதம் குறையும் என பொதுவுடமை நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவிநாதன் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்து தற்போது பொதுவுடமை நாம் தமிழர் கட்சி என உருவாகியுள்ள நிலையில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவிநாதன் அதிமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்து தேர்தல் பணிகள் சம்பந்தமாக ஆலோசனை மேற்கொள்ள வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், அதிமுக கட்சிக்கு தனது கட்சி முழு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தற்போது நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது உள்ள வெறுப்பால் கடந்த முறை அவர்கள் பெற்ற வாக்கு சதவீதத்தை விட இந்த முறை பாதியாக அது குறையும் என தெரிவித்தார்.

மேலும் பாசிச பாஜக மற்றும் இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் ஈழ தமிழர்கள் படுகொலையில் ஈடுபட்ட காங்கிரஸ், மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசு ஆகியவற்றை எதிர்க்கும் ஒரே சக்தியாக அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாகவும் அவரது கூட்டணி தான் வலுவாக இருப்பதாகவும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் அலை வீசுவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

Updated On: 29 March 2024 9:49 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்