/* */

தெரு நாய்களின் பசி போக்கும் கூலி தொழிலாளி!

பராமரிப்பின்றி தெருவில் சுற்றி தெரியும் நாய்களை சேகரித்து பசியை போக்கி வரும் கூலி தொழிலாளி!

HIGHLIGHTS

தெரு நாய்களின் பசி போக்கும் கூலி தொழிலாளி!
X

பட விளக்கம்: பராமரிக்கப்படும் தெரு நாய்களை படத்தில் காணலாம்.

தென்காசி அருகே பராமரிப்பின்றி விடப்பட்டுள்ள தெரு நாய்களை சேகரித்து, நாய்களின் பசிப்பிணியை போக்கி வரும் ஏழை தொழிலாளி.

தென்காசி மாவட்டம் வெய்க்காலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன். இவரது மனைவி விஜயவள்ளி பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். குணசீலன் டிவி பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக தெருக்களில் அனாதையாக பராமரிப்பின்றி விடப்பட்டுள்ள நாய்களை அரவணைத்து அதற்கென ஊருக்கு ஒதுக்குப் புறமாக தனது சொந்த நிலத்தில் வீடு அமைத்து பராமரித்து வருகிறார்.

வீடுகளில் நாய்களை வளர்க்க முடியாதவர்கள் இங்கு வந்து வீட்டு செல்வதும், நாய்களை வளர்க்க விரும்புவோர் இங்கு வந்து எடுத்து செல்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. உள்ளூர் மட்டுமல்லாது இவர் செல்லும் வெளியூர்களிலும் தெருக்களில் நாய்கள் பராமரிப்பின்றி காணப்பட்டால் அதனை உடனே இங்கு கொண்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவ்வாறு நெல்லை. திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான நாய்களை வளர்த்துள்ளார்.


இங்கு வளரும் நாய்களுக்கு கருப்பாயி, வெள்ளையா என ஒவ்வொரு பெயர்களை சூட்டி பாசத்தோடு வளர்த்து வருகிறார். குணசீலனின் சப்தத்தை கேட்டாலே துள்ளி குதித்து ஒடி வரும் தாய் நாய்கள், தான் ஈன்றெடுத்த குட்டிகளை போலவே அனைத்து குட்டி நாய்களுக்கும் பால் கொடுத்து பாசத்தோடு அரவணைத்து கொள்கிறது.

6 அறிவு படைத்த மனிதனுக்கு பசி ஏற்பட்டால் வாய் திறந்து கேட்டு விடலாலும், ஆனால் 5 அறிவு படைத்த நாய்களுக்கு பசி ஏற்பட்டால் அவைகளால் என்ன செய்ய முடியும் என்றுணர்ந்த குணசீலன் நாய்களின் பசியை போக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு நாய்களை பராமரித்து வருகிறார்.

வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடி நின்றேன் என்ற வள்ளலார் போதனையை பின்பற்றும் குணசீலன் தனது ஏழ்மை நிலையிலும் நன்றியுள்ள ஜீவராசிகளின் பசிப்பிணியை போக்கும் இந்த செயல் பாராட்டுக்குரியதே.

Updated On: 15 March 2024 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  2. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  4. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  6. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  9. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?