/* */

காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்

காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்
X

தென்காசியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோவில் மாசிப் பெருந்திருவிழாவில் சுவாமி - அம்பாள் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசிப் பெருந் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாசிப் பெருந்திருவிழா கடந்த 18-ம் தேதி சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி திருவிழா நடைபெற்று வந்தது. விழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

விழாவின் 9-ம் திருநாளான இன்று சுவாமி, அம்பாள் திருத்தேரோட்டம் நடந்தது. முன்னதாக திருத்தேருக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 2-ம் பராக்கிரம பாண்டியன், விநாயகர், முருகர் சப்பர ரத வீதி உலாவும், இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து திருத்தேரோட்டம் நடந்தது. இதில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.

Updated On: 26 Feb 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...