/* */

ஆசிரியர் கலந்தாய்வு மையம் முன்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

கடந்த 3 ஆண்டுகளாக கூடுதல் ஆசிரியர் நியமிக்கமால் அதிமுக ஆட்சி காலத்தில் தாமதப்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டினர்

HIGHLIGHTS

ஆசிரியர் கலந்தாய்வு மையம் முன்பாக  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
X

சிவகங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 

ஆசிரியர் கலந்தாய்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

சிவகங்கை: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை நீக்க கோரியும், கூடுதல் ஆசிரியர் பணியிடம் நியமிக்க வேண்டியும் கலந்தாய்வு நடைபெறும் சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, கல்வி மாவட்ட செயலாளர்கள் சகாயதைனேஷ், ஜெயக்குமார், சிங்கராயர், கல்வி மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெறுவதை கண்டித்தும், கொரோனா காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில். மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக ஒதுக்கி இந்த பொதுமாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களை நியமிக்கக் கோரியும், நியாயமான கோரிக்கைக்காக போராடிய ஆசிரியர்களை அவதூறாக பேசி கைது நடவடிக்கைக்கு தூண்டிய தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைள கண்டித்தும் ஆசிரியர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் பேசியதாவது: தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக கூடுதல் ஆசிரியர் நியமிக்கமால் கடந்த ஆட்சியில் கால தாமதப்படுத்தி வந்தனர்.தற்போது புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு ஏழை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக கூடுதல் தேவை உள்ள பள்ளிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவித்து அந்த இடங்களில் மாறுதல் கோரி உள்ள ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார். இதுகுறித்து மாநில மையம் சார்பாக பள்ளிக்கல்வி ஆணையர் தொடக்கக்கல்வி இயக்குனர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கு எழுத்துப்பூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Updated On: 25 Feb 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!