/* */

சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி ஏற்பு

Anti Corruption -இந்தியக் குடியரசில் ஊழலைத் தடுக்க 1988 -ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி  ஏற்பு
X

சிவகங்கை மாவட்ட, ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் கீழ்க்கண்ட உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்

Anti Corruption -அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடித்திட தமிழக அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில்,ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி, சிவகங்கையில் , அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள ஏற்கப்பட்டது.

இந்தியக் குடியரசில் ஊழலைத் தடுக்க 1988ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பொது ஊழியர் தன்னால் செய்யப்பட வேண்டிய அதிகாரப் பூர்வமான வேலைக்கு சட்டப்படி பெற வேண்டிய ஊதியத்தை தவிர கைகூலி பெறுவது.பொது ஊழியம் செய்பவர் மறுபயன் இல்லாமல் விலை மதிப்புள்ள பொருட்களை தன்னுடைய அலுவல் நடவடிக்கையில் ஈடுபட்டு ஒருவரிடம் வாங்குவது.

இதன்படி லஞ்சம் வாங்குவது குற்றம் என கருதப்பட கீழ்கண்ட அம்சங்கள் தேவை:அதில் சம்பந்தப்பட்டவர் பொது ஊழியராக இருத்தல் வேண்டும்.அவர் செய்யும் வேலை அதிகாரப் பூர்வமாக இருக்க வேண்டும்.பொது ஊழியர் தான் செய்ய வேண்டிய வேலையை செய்வதற்கோ அல்லது செய்யாமல் இருப்பதற்கோ சட்டத்திற்குப் புறம்பாக பணம் கோருதல் அல்லது பெறுதல்.

பொது ஊழியரின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகித்துப் பண மதிப்புள்ள அனுகூலம் பெறத் தகாத சலுகை அளித்தல்.ஒரு குடிமகனிடமிருந்து பொது ஊழியர் அதிகாரப் பூர்வமான கடமையைச் செய்வதற்காக மறுபயனின்றி விலை மதிப்புள்ள பொருளைப் பெறுவதும் லஞ்சமே.அந்த பொது ஊழியர் நேரடியாகவோ அல்லது முகவர் மூலமாகவோ லஞ்சம் பெற்றால் அவரும் அவருக்கு லஞ்சம் வழங்குபவர்களும் குற்றவாளிகள்.

பொது ஊழியர் தனது வருமான வழிவகைகளுக்குப் பொருந்தாத விதத்தில் சொத்துக்களைக் சேர்த்தலும் சட்டத்தின் படி குற்றம் என வரையறுக்கப் பட்டிருக்கிறது.லஞ்ச ஊழலை சட்டத்தின்படி தவறு இழைத்த ஒரு நபருக்குத் குறைந்த பட்சம் ஆறு மாதம் ஐந்து ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

ஊழலை ஒழிப்பதற்கு இந்திய அரசு மத்திய விழிப்புணர்வு ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுத் துறைகளில் ஊழல் குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வு குழுவும் மாநில அரசுத் துறைகளில் ஊழல் குறித்த வழக்குகளை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்கள். தமிழகத்தில் இந்த அமைப்பு இயக்குநர் சென்னை மல்லிகை மாளிகையில் செயப்பட்டு வருகிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் நாள் முதல் ஒரு வார காலம் ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரமாக இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்ட, ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் கீழ்க்கண்ட உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி,நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன்.அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.

எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞசம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கும் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Nov 2022 10:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்