/* */

நிலம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்; சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

ரூ.1 கோடி மதிப்பில்லான 120 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றியதில் பாரபட்சம் காட்டியதாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நிலம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்; சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
X

சாலை மறியலில் ஈடுபட்ட கருங்குளம் கிராம மக்கள்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கருங்குளம் ஊராட்சி உள்ளது. இதில் கருங்குளம், உசிலங்குளம், தெற்குபட்டி, உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கண்மாய்க்கு செல்ல கூடிய வரத்து கால்வாய்களை இந்த கிராமத்தில் 120 ஏக்கர் நிலத்தை 11 பேர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இதனை மீட்கக் கோரி பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ஆட்சியர் உத்தரவின் பேரில் அந்த இடங்களை நேற்று ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் வருவாய்துறையினர் அகற்றினர்.

இந்நிலையில், 30 ஆண்டு கால ஆக்கிரமிப்புகளை அகற்றியதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி இன்று காளையார் கோவில் -தொண்டி சாலையில் கல்லுவழி என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது காளையார்கோவில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் இருப்பதாகவும் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து முழுமையாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். காவல்துறையினர் வந்து சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதும் ஒரு மணி நேர மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 2 Sep 2021 5:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!