/* */

உள்ளாட்சிதேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை: சிவகங்கை எஸ்பி அறிவிப்பு

உள்ளாட்சிதேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு  தடை: சிவகங்கை எஸ்பி அறிவிப்பு
X

செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சிவகங்கை  மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை பட்டாசு வெடிக்கவே ஊர்வலமாக செல்வதற்கு அனுமதி இல்லை என்று சிவகங்கை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் 2,000 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.4 மையத்தில் 54 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும். முதலாவதாக தபால் ஓட்டுகள் எண்ணப்படும் .அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்படும்.

தொடர்ந்து ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மேலும் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் 11 பேரூராட்சி களுக்கு நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 4 மையங்களில் நாளை நடக்கிறது.சிவகங்கை அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் சிவகங்கை, மானாமதுரை ஆகிய 2 நகராட்சியும் நாட்டரசன்கேட்டை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய 3 பேரூராட்சிகளும் நடைபெறுகின்றது

காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி காரைக்குடி நகராட்சி மற்றும் கானாடுகாத்தான் பள்ளத்தூர், கோட்டையூர், புதுவயல் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கும் நடைபெறுகின்றது.தேவகோட்டையில் டி- பிரிட்டோ பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை நகராட்சிக்கும் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை ஆகிய 3 பேருராட்சிகளுக்கும் நடை பெறுகிறது.2056 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியிலும் பாதுகாப்பு பணியில் போலீஸார் மொத்தம்: 2111 பேர் ஈடுபடவுள்ளனர் என்றார் ஆட்சியர்.

Updated On: 21 Feb 2022 3:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி