/* */

தேர்தலில் குற்ற செயல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக ரவுடிகள் கைது செய்ய முடிவு

ராணிப்பேட்டை மற்றும் 3 மாவட்டங்களில் தலைமறைவாகியுள்ள450 ரவுடிகளை பிடிக்கதனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேர்தலில் குற்ற செயல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக ரவுடிகள் கைது செய்ய முடிவு
X

தேர்தலின்போது குற்ற செயல்களைத் தடுக்க ரவுடிகள் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மற்றும் 3மாவட்டங்களில் தலைமறைவாகியுள்ள450 ரவுடிகளை பிடிக்கதனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும், 19 ல் நடக்கிறது. தேர்தலின் போது குற்றச்சம்பவங்கள் நடக்காமலிருக்க ரவுடிகள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். அதில் வேலுார் மாவட்டத்தில் 756, ராணிப்பேட்டை, 345, திருப்பத்துார் மாவட்டத்தில் 300 என 1,401 ரவுடிகள் உள்ளதாக போலீசார் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தேர்தல் முடியும் வரை எந்தவித கலவரத்திலும் ஈடுபட மாட்டோம் என அவர்களிடம் போலீசார் 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி கையெழுத்து வாங்கி வருகின்றனர். இருப்பினும் அதிகளவு குற்றச்செயல்களில் ஈடுபடும் 450 ரவுடிகளை தேர்தல் முடியும் வரை கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். தலைமறைவாகி விட்ட ரவுடிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 1 Feb 2022 10:24 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!