/* */

ரயில்வே பாலத்தில் விரிசல் சீரமைப்புபணிகள் தீவிரம்.

இராணிப்பேட்டை மாவட்டம்ஒட்டிய பொன்னையாறு இரயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரசல் காரணமாக சீரமைப்பு பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர்

HIGHLIGHTS

ரயில்வே  பாலத்தில் விரிசல் சீரமைப்புபணிகள் தீவிரம்.
X

சேதமடைந்த பொன்னையாற்று ரயில்வே பாலம்

இராணிப்பேட்டை மாவட்டம் ஒட்டிய பொன்னையாறு இரயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரசல் காரணமாக சீரமைப்பு பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் ஓட்டிய பொன்னையாற்றின் குறுக்கே, 1865ம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சியில் ரயில்வே மேம்பாலம் 55 கண்களைக் கொண்டு நீண்ட கருங்கற்களால் தூண்கள் அமைக்கப்பட்டுகட்டப்பட்டது.

அதில் 38, 39க்கிடையே உள்ள தூண் பகுதியில் விரிசல் ஏற்பட்டது. அதனால் நேற்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஆற்றில் இருவழிப்பாதையாக இருந்து வந்த சூழலில் தற்போது ஒருவழி பாதையாக மாற்றி அனைத்து ரயில்களும் இயக்கப்படுகின்றது. சென்னையிலிருந்து பெங்களூரு, திருவனந்தபுரம், கோவை, ஈரோடு மார்க்கத்தில் செல்லும் ரயில்களும், அந்த மார்க்கத்திலிருந்து சென்னைக்கு வரும் ரயில்களும் தாமதமாக செல்கின்றது. ரயில்வே ஊழியர்கள் விரிசல் ஏற்பட்டுள்ள பாலத்தின் கீழ் இரும்பு கிரில் பாக்ஸ்களை அடுக்கி வருகின்றனர்.

கடந்த மாதம் ஆந்திராவில் கலவகுண்டா அணை திறக்கப்பட்டதால் பொன்னை ஆற்றில் மிகப்பெறிய அளவில் வெள்ளம் பலநாட்களாக நாட்களாக ஓடியது. அதனால் பாலத்தின் துாண்களையொட்டி மண் அரிப்புகள் ஏற்பட்டு் பாலம் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது பாலத்தில் வரும் தண்ணீரை வேறு வழியாக திருப்பி வருகின்றனர். அதன் பிறகு விரிசல் அடைந்துள்ள பாலத்தூணை சுற்றி செய்யப்படும். இந்த பணிகள் முடிய சில நாட்கள் ஆகும்.

சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பாலத்தில் விரிசல் ஏற்பட்ட இரண்டு பில்லர்கள் விரைவில் சரி செய்யப்படும். மற்ற இடங்களில் உள்ள 55 பில்லர்களும் அரிக்காமல் பழுது பார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்படும்.

சென்னையில் இருந்து கோவை, பெங்களூரு மார்க்கத்திலும், சென்னையிலிருந்து வேலுார், ஜோலார்பேட்டை வரை உள்ளூர் மார்க்கத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்படும்.

சில்சார்– கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் கூடூர், ரேணிகுண்டா, பாகாலா வழியாகவும், டாடா நகர்– எர்ணாகுளம் மெயில் ரயில், கூடூர், ரேணிகுண்டா, பாகாலா, காட்பாடி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

மைசூர்–சென்னை சென்ரல் சூப்பர் பாஸ்ட் காட்பாடி வரை இயக்கப்படுகின்றது. சென்னை சென்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் காட்பாடியில் இருந்து இயக்கப்படுகின்றது.

25ம் தேதி மங்களூரு– சென்னை சூப்பர் பாஸ்ட், ஆலப்புழா– சென்னை சென்ரல், ரேணிகுண்டா– மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On: 25 Dec 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்