/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பார்வையாளர் ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பார்வையாளர் ஆய்வு
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் சாந்தா ஆய்வு செய்தார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுவோர்களிடமிருந்து வேட்பு மனுக்களைப் பெற்றப்பட்டுள்ளது. தேர்தலை நடத்தும் ஆயத்தப் பணிகள் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்து வருகிறது

இந்நிலையில், 7ஒன்றியங்களுக்கான மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடந்த பின்பு வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைத்து பாதுகாக்கப்படும். அதன்படி, அரக்கோணம் ஒன்றியத்தின் வாக்குப்பெட்டிகள் அரக்கோணம் கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி ,நெமிலி ஒன்றியத்தின்வாக்குபெட்டிகள் பணப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி சோளிங்கரின் வாக்குப்பெட்டிகள் சோளிங்கர் பெண்கள்மேல் நிலைப்பள்ளி.

காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஓச்சேரி சப்தகிரி பொறியியல்கல்லூரி, திமிரி ஒன்றியம் கலவைஆதிபராசக்தி கல்லூரி, ஆற்காடு ஒன்றியம் ஆற்காடு ஜிவிசி, வாலாஜா ஒன்றியத்தின் வாக்குபெட்டிகள் தென் கடப்பந்தாங்கலில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் வைத்து பாதுகாக்கப்படவுள்ளது.இந்த மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன .இந்த மையங்களின் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட சாந்தா, வாலாஜா ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். அஙகு, வாக்குப்பெட்டிகள் வைக்கும் பாதுகாப்பறை, எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் , பார்வையாளர் அமரும் இடங்கள், வாக்குப்பெட்டிகள் கொண்டுவந்து அறையில் அடுக்கும் விதம்,எண்ணிக்கை ஆகியவற்றைக் அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசணைகளை வழங்கினார். ஆய்வில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், காவல்கண்காணிப்பாளர் தீபாசத்தியன் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

.

Updated On: 22 Sep 2021 5:28 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்