/* */

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறைதீர் முகாம் ரத்து: கலெக்டர் அறிவிப்பு

குறைதீர் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்கள் மனு அளிக்க வருவதைத் தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறைதீர் முகாம் ரத்து:  கலெக்டர்  அறிவிப்பு
X

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மனுக்களுடன் பொது மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளின் முன்னிலையில் நடந்து வரும் அனைத்து விதமான மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது.மேலும் பொதுமக்கள் பொது இடங்களில் அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரானா மற்றும் ஓமிக்ரான் வைரஸ் தொற்றுகாரணமாக மாண்புமிகு தமிழக முதல்வரின் உத்தரவின்படி, வாரநாட்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ,இராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரானா மற்றும் ஓமைக்ரான் தொற்றுநாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் கட்டுப்படுத்த அரசின் முன்னெச்சரிக்கை யான பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.அதன்அடிப்படையில்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வந்து மனுக்களை வழங்குவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாத்திடும் விதமாக 10ந்தேதிமுதல் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மறு உத்தரவு வரும் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல விவசாயிகள் குறைதீர்வு நாள் ,சிறப்பு மனுநீதிநாள் முகாம் , வாரந்தோறும் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்களும் ரத்து செய்யப்படுகிறது.எனவே,வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளுக்கு நாள்அதிகரித்து வரும் நோய்தொற்றிலிருந்து தங்களைப்பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை அவசியமின்றி வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும்.

தடுப்பு ஊசியை கட்டாயம் செலுத்திக் கொள்ளவேண்டும். பொது இடங்களில் அதிக அளவு கூட்டங்கள் கூட கூடாது.வெளியில் செல்லும்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பண்டிகை மற்றும் விழா காலங்களில் பொதுமக்கள் அதிக கூட்டம் சேர்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த விதிகளை இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 8 Jan 2022 3:14 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!