/* */

விளையாட்டு மைதானத்தில் 20 ஆண்டுகால ஆக்கிரமிப்பு அகற்றம்

இராணிப்பேட்டையில் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை திமுக சுற்றுசூழல் பாதுகாப்பு துணைசெயலாளர் விநோத்காந்தி மீட்டெடுத்தார்

HIGHLIGHTS

விளையாட்டு மைதானத்தில் 20 ஆண்டுகால ஆக்கிரமிப்பு அகற்றம்
X

சிப்காட் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டைஅடுத்த நவல்லாக் ஊராட்சிக்கு உட்பட்ட சிப்காட் பகுதிக்கு அரசால் விளையாட்டு மைதானம் வழங்கப்பட்டது. ஆனால் மைதானம் சில நபர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்தனர் .

இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளமுடியாமலும் உடற்பயிற்சி, நடைபயிற்சிகள் உள்ளிட்டவற்றை செய்யமுடியாமல் தவித்து வந்தனர். மேலும, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மூலம் பலமுறை அதிகாரிகளிடத்தில் புகார் அளித்து வந்தனர். .ஆனால், இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை

இந்நிலையில் திமுக மாநில சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு துணை செயலாளர் வினோத் காந்திக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்குவந்து பார்வையிட்ட அவர் உடனே, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு மைதானத்திலிருந்த அனைத்தையும் அகற்றி சுத்தம் செய்து விளையாட்டு மைதானத்தை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

சுமார் 20ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்த மைதானம் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் அப்பகுதிஇளைஞர்கள்,விளையாட்டு வீரர்கள்,பொதுமக்கள் அனைவரும். மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் ,ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மை செய்து தந்த திமுக சுற்று சூழல் மற்றும் பாதுகாப்பு துணைசெயலாளர் வினோத் காந்திக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். அப்போது மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயந்தி ஒன்றிய தலைவர் வெங்கடரமணன் ஆகியோர்உடனிருந்தனர்.

Updated On: 29 Oct 2021 8:52 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்