/* */

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: மறுவாழ்வு நலத்துறை இயக்குநர்தகவல்

இலங்கை அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட ஆய்வில், 80 சதவீதம் அகதிகள் மீண்டும் இலங்கைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்

HIGHLIGHTS

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: மறுவாழ்வு நலத்துறை இயக்குநர்தகவல்
X

மத்திய அரசிடம் இருந்து இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை விரைவில் பெற்றுத்தரப்படும் மறுவாழ்வு நலத்துறை இயக்குநர் உறுதி.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் இன்று ஆய்வு செய்தார். இலங்கை அகதிகள் வசிக்கும் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களது அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்திய குடியரிமை வழங்க வேண்டும். குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி, வீடு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஜெசிந்தா லாசரஸ் மேலும் கூறியதாவது : தமிழகம் முழுவதும் தங்கியுள்ள இலங்கை அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட ஆய்வில், 80 சதவீதம் அகதிகள் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் முறையாக ஆவணம் பெற்று செல்வது குறித்து இதுவரை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவில்லை. அப்படி மனு அளிக்கும் பட்சத்தில் மத்திய அரசிடம் அனுமதி பெற்று மீண்டும் இலங்கை அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடு நிச்சயம் மாநில அரசு சார்பில் எடுக்கப்படும் என்றார்.

மேலும் சிலர், தாங்கள் தொடர்ந்து தமிழகத்திலேயே வசிக்க ஆசைப்படுவதால், எங்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர். அது குறித்தும், தமிழக முதல்வர் கடிதம் மூலமாக மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசிடம் இருந்து விரைவில் அனுமதி பெற்று இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கொரோன காலத்தில் இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்வது அதிகரித்துள்ளதால் அதனை தடுக்க கடல் பாதுகாப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதுடன், அகதிகள் நல மறுவாழ்வு துறை அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

Updated On: 11 Aug 2021 11:05 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்