/* */

ஆபாச ஆடியோவை ஊருக்கே ஒலிபரப்பி தெறிக்க விட்ட கிராம மக்கள்

ஊர் தலைவர்களை ஆபாசமாக பேசியவரின் வாட்ஸ் ஆப் ஆடியோவை, ஊருக்கே ஒலிபரப்பி 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த கிராம மக்கள்

HIGHLIGHTS

ஆபாச ஆடியோவை ஊருக்கே ஒலிபரப்பி தெறிக்க விட்ட கிராம மக்கள்
X

ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை ஊராட்சி, பால்கரை கிராமத்தில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. ஊரில் குடிநீர் தேவைக்காக உள்ள மரைக்காயர் ஊருணி ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால், ஆக்கிரமிப்பை அகற்ற, ஊர் தலைவர் கருப்பையா தலைமையில், ஊர் மக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆக்கிரமிப்புகளை குழு அமைத்து அகற்ற கூட்டத்தில் முடிவானது. இதன்படி, சில நாட்களுக்கு முன், ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதில், அதே ஊரைச் சேர்ந்த, துபாயில் வேலை செய்யும் முத்துகுமார் வசம் இருந்த இடமும் அளக்கப்பட்டது.

இதை, தனதுகுடும்பத்தினர் மூலம் அறிந்த முத்துகுமார், துபாயில் இருந்தவாறே ஊர் பிரமுகர்களை ஆபாசமாக பேசி, வாட்ஸ்- ஆப்பில் ஆடியோக்களாக அனுப்பினார். இந்த பேச்சு பல்வேறு குழுக்களில் பரவியது. அந்த பேச்சை பதிவு செய்து, எஸ்.பி., அலுவலகத்தில் கிராம பிரமுகர்கள் புகார் அளித்தனர்.ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, முத்துகுமாரின் பேச்சை கிராமம் முழுவதும் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பினர். மேலும் முத்துகுமாருக்கு கிராமத்தின் சார்பில் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ராமநாதபுரம் டி.எஸ்.பி., ராஜாவிடம், இது குறித்து கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Updated On: 19 Aug 2021 5:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  3. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  4. ஈரோடு
    பெருந்துறையில் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்தநாளையொட்டி சர்க்கரை...
  5. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  6. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  7. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  8. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  9. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  10. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...