/* */

லாரி உரிமையாளர்களிடம் மோட்டார் வாகன ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக புகார்

இராமநாதபுரம் லாரி உரிமையாளர்களிடம் மோட்டார் வாகன ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

லாரி  உரிமையாளர்களிடம் மோட்டார் வாகன ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக புகார்
X
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் லாரி உரிமையாளர்கள் புகார் மனு அளித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் டிப்பர் லாரி மற்றும் குவாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சுமார் 100 க்கும்மேற்பட்டோர் தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மாவட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் பூரண லதா என்பவர் திருப்புல்லாணி அருகே வாகன சோதனை என்ற பெயரில் சுமார் 10 வாகனங்களுக்கு தலா50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை அபராதம் விதித்து,டிப்பர் லாரி உரிமையாளர்கள் மீது தவறான நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வரவும் மோட்டார் வாகன ஆய்வாளர் பூரண லதா மீது போக்குவரத்து ஆணையர் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இராமநாதபுரம் மாவட்ட டிப்பர் லாரி மற்றும் குவாரி உரிமையாளர் நலச்சங்க தலைவர் ஜெயபாரத், செயலாளர் ராஜமாணிக்கம் பொருளாளர் முத்தீஸ்வரர் உள்ளிட்டோர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கலால் குமாவத்திடம் மனு கொடுத்தனர்.

மேலும் டிப்பர் லாரி மற்றும் மணல் குவாரி உரிமையாளர்கள் ஒவ்வொரு வாகனத்திற்கும் 20000 வீதம் லஞ்சமாக வழங்க வேண்டும் எனவும் அச்சுறுத்தி வருவதாகவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொழிலை நம்பி மாவட்டம் முழுவதும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Updated On: 10 April 2022 5:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிமேல் காலையில் டீ- க்கு பதிலா ஏலக்காய் தண்ணீர் குடியுங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் பூ சாப்பிடுவதால், இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்குதா?
  3. அரசியல்
    அண்ணாமலை எடுத்த முடிவு சரி! பிரதமர் மோடி அதிரடி ஆதரவு
  4. டாக்டர் சார்
    செயற்கை நுண்ணறிவு மூலம் மரபணு வடிவமைப்பில் மேம்பாடு
  5. இந்தியா
    சந்திரபாபு நாயுடுவின் மனைவியின் சொத்து மதிப்பு 5 நாட்களில் 55 சதவீதம்...
  6. வீடியோ
    🔴LIVE: கோவில்கள் மீது அரசு அநியாய வரி | Ponmanickavel பாய்ச்சல் #DMK...
  7. காஞ்சிபுரம்
    மேயர் மீது நம்பிக்கை இல்லை: மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம்...
  8. குமாரபாளையம்
    பசுந்தாள் உரவிதைகளை மானிய விலையில் பெற வேளாண்மை உதவி இயக்குநர்
  9. சினிமா
    கமல் சொன்னதை இப்ப வர ஃபாலோ பண்ணும் மோகன்..!
  10. தொழில்நுட்பம்
    உடல் எடையை குறைக்க உதவும் 5 சிறந்த செயலிகள்