/* */

இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக வயதான மீனவர்கள் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
X

இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக வயதான மீனவர்கள் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வயதான மீனவர்கள் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் நூற்றுகணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் பலர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கை மற்றும் கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த இராமேஸ்வரம் எம்ஆர்டி நகரை சேர்ந்த மீனவர் நல்ல மருது மற்றும் தெற்கு கரையூரை சேர்ந்த மீனவப் பெண் முனியம்மாள் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக இராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்களை பரிசோதனை செய்த இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உள்ள எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு மருத்தவர்கள் முனியம்மாளுக்கு வலது கை எலும்பு மூட்டு மற்றும் நல்ல மருதுக்கு வலது கால் எலும்பு மூட்டு அதிக அளவில் தேய்மானம் அடைந்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து இருவரும் கடந்த வாரம் இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஸ்டீபன் ராஜ் அறிவுரையின் பேரில் இராமேஸ்வரம் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு தலைமை மருத்துவர் ஆதித்யா தாகூர்; தலைமையில் மருத்துவர்கள் பிரபாகரன், மனோஜ் மயக்கவியல் மருத்தவர் வினிதா அடங்கிய குழுவினர் இரு வேறு நாட்களில் முனியம்மாளுக்கு வலது கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும், நல்ல மருதுவுக்கு வலது கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தது.

இதுகுறித்து இணை இயக்குனர் டாக்டர் ஸ்டீபன் ராஜ் தெரிவிக்கையில், இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இது தனியார் மருத்துவமனையில் செய்ய வேண்டுமானால் சுமார ரூ.2.50 லட்சம் செலவாகும். ஆனால் இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அவர் வீட்டிற்கு செல்லலாம். மேலும் சில நாட்கள் கழித்து அவர் முன்பு போல் வழக்கமான பணியை மேற்கொள்ளலாம். இனி வரும் காலங்களில் இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Updated On: 4 April 2022 7:34 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது