/* */

தமிழக மீனவர்களை சந்திக்க மறுத்த முதல்வர்: போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு

தமிழக மீனவர்களை சந்திக்க முதல்வர் மறுத்தால் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு.

HIGHLIGHTS

தமிழக மீனவர்களை சந்திக்க மறுத்த முதல்வர்: போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு
X

இராமநாதபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக கடலோர அனைத்து மீனவர் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இராமநாதபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக கடலோர அனைத்து மீனவர் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாகை, கன்னியாகுமரி தூத்துக்குடி, காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் டீசல் விலை உயர்வால் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படங்களும் வாழ்வாதாரமின்றி வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது.

இதற்கு மத்திய , மாநில அரசுகள் டீசலை உற்பத்தி விலைக்கே வழங்க கோரியும், இலங்கை இந்தியா இடையே பாரம்பரியமான இடத்தில் மீன் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தை கிடப்பில் கிடப்பதை உடனடியாக நடத்த வேண்டும், மீன்வளம் மசோதாவை தடை செய்ய வேண்டும், மீனவர்கள் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி ஆறு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு வருகின்ற 10ம் தேதிக்குள் நேரடியாக அழைத்து தங்களுடைய பிரச்சனைகளை தீர்வு கண்டால் தாங்கள் பிரச்சினையில்லாமல் மீன் பிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும், இல்லையென்றால் வருகின்ற 11ம் தேதியிலிருந்து நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் தமிழகம் தழுவிய வேலைநிறுத்தம் செய்வோம். மேலும் வருகின்ற 15ஆம் தேதி சென்னையில் மிக பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம், மீனவர்களை போராட்ட களத்தில் தள்ளாமல் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 Oct 2021 2:57 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  6. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  7. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  8. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  9. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...