/* */

இறால்பண்ணைகளின் பதிவை புதுப்பிக்க வேண்டும்: புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்

இறால் பண்ணைகளின் பதிவு உரிமத்தினை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் புதுப்பிக்க வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தல்

HIGHLIGHTS

இறால்பண்ணைகளின் பதிவை புதுப்பிக்க வேண்டும்:  புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறால் பண்ணைகளின் பதிவு உரிமத்தினை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத் தில் புதுப்பித்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் 57 இறால் பண்ணைகள் பதிவு செய்யப்பட்டு, இறால் வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத் தவிர 5 இறால் பண்ணைகள் பதிவு செய்திட மாவட்ட அளவுக் குழுவினரால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதிவு செய்யப்பட்ட அனைத்து இறால் பண்ணைகளில் பதிவு காலம் முடிவுற்றுள்ளது.

எனவே, அனைத்து இறால் பண்ணைகளின் பதிவு உரிமத் தினை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் புதுப்பித்திட வேண்டும். மேலும் எவ்வித பதிவு செய்யப் படாமலும் இறால் பண்ணைகள் இயக்கத்தில் உள்ளதாக அறிய வருகிறது. இவ்வாறு செயல்படும் இறால் பண்ணைகள் உடனடியாக இறால் வளர்ப்பு பணிகளை நிறுத்த வேண்டு மென அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு பதிவு செய்யப்படாமல் உரிமம் புதுப்பிக்காமல் இயங்கும் இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைச் சட்டம் 2005 பிரிவு 14-ன் படி, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 இலட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டம் பிரிவு 15-ன் படி தகுதியான நீதிமன்றத்தில் குற்றத்தை பதிவு செய்து நடவடிக்கை எடுத்திட உறுப்பினர் செயலரான மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தினை கடுமையாக செயல்படுத்திட கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தினால் அறிவுறுத்தப் பட்டுள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் இறால் பண்ணைகளை உடனடி யாக பதிவு செய்திடவும் மற்றும் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கும் இறால் பண்ணைகளின் பதிவு உரிமத்தினை புதுப்பித்திடவும் இறால் பண்ணை உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறனர்.தவறினால் மேற்படி சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விவரம் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்.கவிதா ராமு தெரிவித்துள்ளார்

Updated On: 31 March 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்