/* */

தொழில்பயிற்சிபள்ளிகளில் அடுத்த ஆண்டுக்குள் 50 ஆயிரம் மாணவர்களை சேர்க்க திட்டம்

உடனடியாக வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய ஏசி மெக்கானிக் பிளம்பர் உள்ளிட்ட பயிற்சிகள் வகுப்புகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

HIGHLIGHTS

தொழில்பயிற்சிபள்ளிகளில் அடுத்த ஆண்டுக்குள் 50 ஆயிரம் மாணவர்களை சேர்க்க திட்டம்
X

புதுக்கோட்டை அரசு ஐடிஐ-யில் அமைச்சர் சி.வி. கணேசன் இன்று ஆய்வு செய்தார். உடன் ஆட்சியர் கவிதாராமு உள்ளிட்டோர்

தமிழகத்தில் தற்போது 25 ஆயிரம் பேர் அரசு தொழில் பயிற்சி பள்ளியில் படித்து வரும் நிலையில் அதை 50 ஆயிரமாக அடுத்த ஆண்டிற்குள் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது என்றார் தமிழக தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவி.கணேசன்.

புதுக்கோட்டை அரசினர் தொழில் பயிற்சி பள்ளியில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி. கணேசன் ஆய்வு மேற்கொண்டார். அரசினர் தொழில் பயிற்சி பள்ளியில் குடிநீர் முறையாக வருகிறதா என்பது குறித்தும், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார் இதன் பின்னர் தொழில் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் கல்வி எவ்வாறு கற்று தரப்படுகிறது என்பது குறித்து நேரடியாக தளத்திற்கு சென்று கேட்டறிந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கணேசன் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் 90 அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது.தமிழக முதல்வர் உத்தரவுப்படி தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 30 தொழிற்பயிற்சி நிலையங்களில் நானே சென்று ஆய்வு மேற்கொண்டேன்.90 அரசினர் தொழில் பயிற்சி மையத்திலும் 25ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.அடுத்த ஆண்டிற்குள் 50 ஆயிரம் மாணவர்களை சேர்ப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது

தொழிற்பயிற்சி மையத்தில் படிக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் லட்சியம்.மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அரசினர் தொழில் பயிற்சி மையங்களை விரிவுபடுத்துவதற்கும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

எந்த தொழில் பயிற்சி படிப்பதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதோ அதனை முன்னுரிமை அளித்து பயிற்சி அளித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்.ஆட்சிக்கு வந்த 150 நாட்களில் 202 திட்டங்களை அறிவித்து இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்று தமிழக முதல்வர் எடுத்துள்ளார்

ஆய்வுக்குப் பிறகு மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் கட்டமைப்புகள் மற்றும் அல்லது புதிய கருவிகள் தொழில் பயிற்சி மையங்களுக்கு வழங்கப்பட உள்ளது. உடனடியாக வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய ஏசி மெக்கானிக் பிளம்மர் உள்ளிட்ட பயிற்சிகள் வகுப்புகளை அடுத்த ஆண்டு அதிக அளவில் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, திமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் கே.கே. செல்லப்பாண்டியன், அவைத் தலைவர் த. சந்திரசேகரன், நகர செயலாளர் க.நைனா முகமது மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்


Updated On: 22 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  6. நாமக்கல்
    குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியில் 15 ம் தேதி கல்லூரி கனவு...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  8. வீடியோ
    😡DMK-வை விமர்சித்தா கஞ்சா வழக்கா ? SavukkuShankar விவகாரத்தில்...
  9. வீடியோ
    SavukkuShankar-க்கு X-Ray எடுக்க இரண்டு நாளாக போராடும் வழக்கறிஞர்...
  10. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...