/* */

மத்திய அரசு சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

டீசல், பெட்ரோல், சுங்க கட்டண உயர்வை குறைக்காவிட்டால் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும்

HIGHLIGHTS

மத்திய அரசு  சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
X

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி, தஞ்சாவூர் மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் விக்ரமராஜா பேசுகிறார்

மத்திய அரசு டீசல், பெட்ரோல் மற்றும் சுங்க கட்டணத்தை உடனடியாக குறைக்காவிட்டால் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார் பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மண்டலம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பங்கேற்ற விக்ரமராஜா செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது ஏற்க முடியாதது .இதுபோன்ற பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் டீசல் பெட்ரோல் மற்றும் சுங்க கட்டணத்தை மத்திய அரசு உடனடியாக குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.



சுங்க கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும் வெளிப்படைத் தன்மையோடு எவ்வளவு தொகை வசூல் செய்யப்படுகிறது எவ்வளவு தொகை செலவு செய்யப்படுகிறது என்பது குறித்த பலகை சுங்கச்சாவடிகளில் வைக்கப்பட வேண்டும். வணிக நிறுவனங்கள் ஓட்டல்கள் ஆகியவற்றில் பலர் உணவு அருந்திவிட்டு, சரக்குகள் வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் ரவுடித்தனம் செய்கிறார்கள். இதனை வணிகர்கள் தட்டிக் கேட்கும் போது, பல பகுதிகளில் பிசிஆர் வழக்கு போடப்படுகிறது இதனை காவல்துறையும், தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.வாட் வரியினால் பல வணிகர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் பேரமைப்பு கோரிக்கை வைத்த பின்னர், அந்த வழக்கை சமரச தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த காலங்களில் ஜிஎஸ்டி பதிவு பெற்றுள்ளவர்கள் மட்டுமே வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்ய முடியும் ஆனால் தற்போதைய தமிழக அரசு அதை நீக்கி, அனைத்து வணிகர்களும் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக ஆகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. வணிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து தமிழக அரசு கோரிக்கைகளை கேட்டு பரிசீலனை செய்து வருகிறது. நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு வணிகர்களுக்கு அறிவித்துள்ளதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுடைய கோரிக்கைகள் தமிழக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் விக்கிரமராஜா.


Updated On: 24 Aug 2021 11:35 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!