/* */

சட்ட அமைச்சர் ரகுபதி முன்னிலையில் புதுக்கோட்டை அரசு பொது வழக்குரைஞர் பதவியேற்பு

அனைத்து நீதிமன்றங்களுக்கும் அரசு பொது வழக்குரைஞர்கள், அரசு வழக்குரைஞர்கள் தமிழக அரசால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்

HIGHLIGHTS

சட்ட அமைச்சர் ரகுபதி முன்னிலையில் புதுக்கோட்டை அரசு பொது வழக்குரைஞர் பதவியேற்பு
X

புதுக்கோட்டை மாவட்ட அரசு பொது வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ள வெங்கடேசன் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் புதுக்கோட்டை நீதிமன்றங்களின் அரசு பொது வழக்குரைஞராக வெங்கடேசன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் அரசு வழக்குரைஞர்களாக பணியாற்றியவர்களின் பதவி காலாவதியாகிவிடும். இதையடுத்து, திமுக சார்பில் தமிழகம் முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் அரசுசார்பில் வழக்காடுவதற்காக, அரசு பொது வழக்குரைஞர்கள் மற்றும் பல்வேறு அரசு வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட அரசு பொது வழக்குரைஞராக அறந்தாங்கியை சேர்ந்த வெங்கடேசனை, தமிழக அரசு நியமித்தது. புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு பொது வழக்குரைஞர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட அரசு பொது வழக்குரைஞராக, அறந்தாங்கி சேர்ந்த வெங்கடேசன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில், முறைப்படி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கவிச்சுடர் கவிதைபித்தன், பெரியண்ணன் அரசு , உதயம் சண்முகம், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 4 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  5. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  6. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  7. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  8. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  9. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்