/* */

அக்னியை தணித்த கோடை மழையால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இடியுடன் மழை பெய்ததால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

HIGHLIGHTS

அக்னியை தணித்த கோடை மழையால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில், இரவில் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை காலத்தில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் , இருந்தது. கொளுத்தும் கோடை வெயிலால் பொதுமக்கள் அவதி அடைந்தனர் இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயில் சுட்டெரிக்கும் என்பதை எண்ணி பொதுமக்கள் வர்த்தக வியாபாரிகள் வருத்தபட்டனர்

இந்த நிலையில் நேற்று இரவுசுமார் 8 மணிக்கு மாவட்டத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் இடி, பலத்த காற்றுடன் மழை பெய்தது. புதுக்கோட்டையில் நேற்று இரவு 8 மணி அளவில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் சாலையில் கிடந்த குப்பைகள், புழுதிகள் பறந்தன. வானில் கருமேகங்கள் திரண்ட நிலையில் இரவு 8.20 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சிறிது நேரம் இடைவிடாமல் ஓரே சீராக பெய்தது. அதேநேரத்தில்பலத்த இடி சத்தமும், மின்னல் வெட்டும் பலமாக இருந்தது. மழை தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள், இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். இரவில் சற்று வெப்பம் தணிந்திருந்தது. குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. பொதுவாக அக்னிநட்சத்திரம் தொடங்கும் நாளிலும், முடிவடையும் நாளிலும் மழை பெய்யும் என கிராமமக்களிடம் பேச்சு உண்டு. அந்த வகையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் நேற்று இரவு மழை பெய்துள்ளது.

பொன்னமராவதி ஒன்றிய பகுதிகளான ஆலவயல், அம்மன்குறிச்சி, தொட்டியம்பட்டி, ஏனாதி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று திடீரென இரவு 8 மணிக்கு மேல் பலத்த காற்று, இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது இதேபோல் ;பல பகுதிகளிலும் பலத்த இடி சப்தமும், மின்னல் வெட்டும் பலமாக இருந்தது. மழை தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது.

Updated On: 5 May 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...