/* */

ஊரடங்கில் உதவிய காவல் ஆய்வாளர்.!

உணவு கிடைக்காமல் தவித்த சாலையோர வாசிகளுக்கு பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டிலை புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் வழங்கினார்,

HIGHLIGHTS

ஊரடங்கில் உதவிய காவல் ஆய்வாளர்.!
X

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலையாக வேகவேகமாக நோய்த்தொற்று பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதன்படி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பித்தது இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

புதுக்கோட்டை நகர பகுதிகளில் பொதுமக்கள் யாரும் வெளியே வராததால் புதுக்கோட்டை பேருந்து நிலையம் கீழராஜ வீதி, மேல ராஜவீதி, அண்ணா சிலை என பல்வேறு இடங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் ஒரு சிலர் தேவையில்லாமல் வாகனங்களில் வந்தனர், காவல்துறையினர் அவர்களுக்கு நோய் தொற்றை பற்றி எடுத்துக் கூறியும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

கொரேனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் நேற்றைய முழு ஊரடங்கு பாதிக்கப்பட்டாலும் சாலையோரம் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமப்பட்டு வந்திருந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் குருநாதன் சாலையோரம் உணவு கிடைக்காமல் வாடுபவர்களை பார்த்தார்.

புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் என அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தவர்களை பார்த்த காவல் ஆய்வாளர் குருநாதன் அவர்கள் உணவு அருந்தவில்லை என கேள்விப்பட்டதும் அருகில் இருந்த ஆவின் பால் கடையில் தண்ணீர் பாட்டில், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வாங்கி நேரடியாக சென்று அவர்களிடம் வழங்கியும் எந்த ஊர் எங்கிருந்து வருகிறீர்கள் என்று அன்பாக அவர்களிடம் கேட்டு அறிந்தார். இதனை வாங்கிக்கொண்ட முதியவர்கள் உணவில்லாமல் கஷ்டப்பட்ட எங்களுக்கு தண்ணீர் பிஸ்கட் வழங்கியதற்கு கண்ணீர் மல்க நன்றியும் கூறினார்.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாலும் கொரோன வைரஸ் தொற்று காலத்தில் காவல்துறையினர் இதுபோன்ற பொது மக்களின் நன்மதிப்பை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவது புதுக்கோட்டை காவல்துறைக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விதமாக இருந்தது.

Updated On: 26 April 2021 5:33 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு