/* */

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

வாக்காளர் தினத்தையொட்டி இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

HIGHLIGHTS

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு
X

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதாராமு தலைமையில்  உறுதி மொழி எடுத்துக்கொண்ட அரசு அலுவலர்கள்

12வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், 12-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதாராமு, தலைமையில் வாக்காளர் உறுதிமொழியினை அனைத்து அலுவலர்களும் இன்று ஏற்றுக்கொண்டார்கள்.

வாக்காளர் உறுதிமொழியான, மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, .மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம் என்ற வாக்காளர் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, தலைமையில் அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், இளம் வாக்காளர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அர்ஜுன்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 25 Jan 2022 7:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  3. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  5. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  7. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  8. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  9. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?