/* */

ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தினை அமைச்சர் திறந்து வைத்தார் .

HIGHLIGHTS

ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்
X

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று புதுக்கோட்டை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன்உற்பத்தி நிலையத்தினை திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில்மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா உடனிருந்தார்.

நிகழ்ச்சிக்குபின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டைஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பிராண வாயு (ஆக்ஸிஜன்) உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் ஒரு மணிநேரத்திற்கு 200 நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கோவிட்தொற்று காலத்தில் ஆக்ஸிஜன் தேவைஅதிகரிக்கும் நிலையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் இருந்தால் நோயாளிகளை பாதுகாக்க மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்பதால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கிணங்க இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் குறுகிய காலத்தில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டைஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் மிகுந்த பயனுள்ளதாக அமையும். அதேபோல்இன்று நீதிமன்ற பணியாளருக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு முழுக்க முழுக்க உயர்நீதிமன்றம் கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது. தேர்வு வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.

அதேபோல் சிறையில் உள்ள பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக பரோல் கேட்டார். அதன் அடிப்படையிலேயே அவருக்கு பரோல் நீடிக்கப்பட்டுள்ளது. நளினியும்,முருகனும் உடல்நிலை சரியில்லை என்று கேட்டுக் கொண்டாலும் அல்லது அவர்கள் உறவினர்கள் யாரேனும் அவர்களுக்காக பரவலுக்கு மனு செய்தால் அது குறித்து அரசு பரிசீலனை செய்து முடிவு செய்யும் என்றார்.

இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், அரசுமருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி மற்றும் திமுக நகர கழக நைனாமுகமது, பாலு உள்ளிட்டதொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 31 July 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  2. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  3. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  4. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  5. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  6. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  7. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  8. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்