/* */

பொன்னமராவதி அருகே அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்த ஜல்லிக்கட்டு

பொன்னமராவதி அருகே அமைச்சர் மெய்யநாதன் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

பொன்னமராவதி அருகே  அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்த ஜல்லிக்கட்டு
X

பொன்னமராவதி அருகே கண்டியா நத்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் செல்வவிநாயகர் கோவில் பொங்கல்விழாவை முன்னிட்டு பிடாரி அய்யனார் கோவில் அருகே உள்ள இடையன்கண்மாயில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி சிவகங்கை மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 650 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளன இரண்டு பிரிவுகளாக களமிறங்கவுள்ள மாடுபிடி வீரர்கள் போட்டி தொடங்கும் முன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

வெற்றி பெற்ற காளைகள் மற்றும் காளைகளை அடக்கிய விரர்களுக்கு சைக்கிள் ,பீரோ, வெள்ளிக்காசு, குக்கர், கட்டில் ,ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பரிசுகளை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தமிழக வீட்டு வசதி வாரியத் தலைவர் பிகே வைரமுத்து ஆகியோர் வழங்கியுள்ளனர்.

சீறிப் பாய்ந்துவரும் காளை மாடு பிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கி வருகின்றனர்.

போட்டியை காண பொன்னமராவதி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் மற்றும் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Updated On: 16 March 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?