/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குநர் ஆய்வு

விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர்விளைச்சல் தரக்கூடிய, இரகங்களின் விதைகளை அரசு உரிமம் பெற்ற விதையை பயன்படுத்த வேண்டும்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குநர் ஆய்வு
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் விதை விற்பனை நிலையங்களில், சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குநர் வளர்மதி அவர்கள் திடீர் ஆய்வு செய்தார் 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் விதை விற்பனை நிலையங்களில், சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குநர் வளர்மதி அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தரமான விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர்விளைச்சல் தரக்கூடிய, இரகங்களின் விதைகளை அரசு உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தினார்.மேலும், புதுக்கோட்டை மாவட்ட விதை ஆய்வாளர்கள், உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகளின் முளைப்பு திறன் மற்றும் தரத்தை உறுதி செய்ய, மாதிரி விதைகளை எடுத்து வருகின்றனர்.

ஆய்வில், தரமற்ற விதைகள் விற்பனை செய்வது தெரியவந்தால், விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்றார். இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள், விதை விற்றதற்கான ரசீது கட்டாயம் வழங்க வேண்டும், ரசீது இல்லாமல் விற்றால் விதைச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

தொடர்ந்து குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில், விதைச்சான்று துறையினரால் மேலப்புதுவயல் கிராமத்தில் 2.5 ஏக்கரில் குணசேகரன் வயலில் ஏடீடி 54 இரக ஆதாரவிதைகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள நெல் விதைப்பண்ணையினை நேரில் பார்வையிட்டு வயல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தூர்கட்டும் பருவத்தில் உள்ள 56 நாள் வயதுடைய பயிர் என்பதால், ஊட்டசத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தரமான விதை உற்பத்தி முறைகளை கடைபிடித்து நல்ல மகசூல் பெற அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது, விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயகமூர்த்தி, வேளாண் துணை இயக்குநர் (மாநில திட்டம்) மோகன்ராஜ், விதை ஆய்வாளர்கள், விதை சான்று அலுவலர்கள் விதை பரிசோதனை அலுவலர் மற்றும் உதவி விதை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பாரம்பரியத்தூய்மையில் இருந்து சிறிதும் குறையாததும், பிற இனக் கலப்பு இன்றி, தூசு துப்பு இன்றி அதிக சுத்தத்தன்மை உடையதும், அதிக முளைப்புத்திறனும் வீரியமும், மற்றும் நோய் தாக்காத விதைகளையே நாம் தரமான விதைகள் என்று சொல்கிறோம்.விவசாயிகளுக்கு விதையின் இனத்தூய்மை பற்றியும் விதைத் தரம் பற்றியும் உத்திரவாதம் அளிப்பதே விதைச் சான்றளிப்பு ஆகும். விதை உற்பத்திக்கு தரக்கட்டுப்பாட்டுக்கென்று சட்ட பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதை சான்றளிப்பு ஆகும்.

இதை "தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்" என்று கூடச் சொல்லலாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக சுத்தத்தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கம் ஆகும். ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன.

Updated On: 17 Nov 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  4. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  5. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  6. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  9. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  10. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!