/* */

புதுக்கோட்டை பெரியார்நகரில் காலி குடங்களுடன் சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

புதுக்கோட்டை பெரியார் நகரில் காலி குடங்களை கையில் ஏந்தியவாறு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர் சிவா.

HIGHLIGHTS

புதுக்கோட்டை பெரியார்நகரில் காலி குடங்களுடன் சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
X

புதுக்கோட்டை பெரியார் நகரில் காலி குடங்களை கையில் ஏந்தியவாறு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர் சிவா.

பெரியார் நகரில் காலி குடங்களை கையில் ஏந்தியவாறு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர் சிவா.

தமிழகம் முழுவதும் நகராட்சி மற்றும் பேரூராட்சி மாநகராட்சிக்கான தேர்தல் தேதியை நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளில் திமுக அதிமுக ,காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் சார்பில் போட்டிகள் பலமாக இருக்கும் நிலையில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கடும் போட்டியாக இருப்பவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் தான்.

புதுக்கோட்டை நகராட்சி பொறுத்தளவில் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டி என்பது மிக அதிக அளவில் இருக்கும் காரணம் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் சுயேட்சையாக களம் இறங்குவார்கள். இதனிடையே ஆளுகின்ற திமுக மற்றும் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக கட்சி வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி இருந்து வருவது சுயேட்சை வேட்பாளர்களுக்கும் தான் இந்நிலையில் நேற்று தான் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்து.

நாளை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் வாங்குவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில் புதுக்கோட்டை நகராட்சியில் சுயேச்சை வேட்பாளர்கள் தற்போதைய தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக புதுக்கோட்டை பெரியார் நகரில் பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் பெரியார் நகர் சிவா கடந்த ஐந்து வருடங்களாக அப்பகுதியில் மக்களுக்காக போராட்டங்கள் நடத்துவது மேலும் கொரோனா வைரஸ் தொற்று காலம் கஜாபுயல் காலம் உள்ளிட்ட பல்வேறு காலகட்டத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து பல்வேறு பணிகளை செய்து வந்த இந்நிலையில் தற்போது நகராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் 36-வது வார்டு சார்பில் பெரியார் நகர் பகுதியில் சிவா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

இதற்காக இன்று பெரியார் நகர் பகுதியில் பல வருடமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருவதால் அதனை பொது மக்களிடம் எடுத்துக் கூறும் விதமாக காலி குடங்களை கையில் ஏந்தியவாறு பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

மேலும் அவர் பொது மக்களிடம் தான் வெற்றி பெற்றாள் 2 வருடத்திற்குள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வில்லை எனில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்கின்றேன்என்றும் பொது மக்களிடம் எடுத்துக்கூறி தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சுயேட்சை வேட்பாளர் பெரியார் நகர் சிவா தமிழகம் முழுவதும் நகராட்சி தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் போட்டியிடுவதற்காக சுயேச்சை வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் புதுக்கோட்டை நகராட்சித் தேர்தலில் தற்போதைய களைகட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Jan 2022 11:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்