/* */

மாணவர்களுக்கு குட்கா புகையிலை மது மற்றும் பெண்கள் சுய பாதுகாப்பு விழிப்புணர்வுமுகாம்

இதில் காவலர்கள், பள்ளித்தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்

HIGHLIGHTS

மாணவர்களுக்கு குட்கா புகையிலை மது மற்றும் பெண்கள் சுய பாதுகாப்பு விழிப்புணர்வுமுகாம்
X

பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் குட்கா,புகையிலை, மது மற்றும் பெண்கள் சுய பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் குட்கா,புகையிலை, மது மற்றும் பெண்கள் சுய பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் குட்கா,புகையிலை, மது மற்றும் பெண்கள் சுய பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு நடைபெற்றது.

திருச்சி சரக காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் உத்தரவின்படி, துணைத் தலைவர் சரவண சுந்தர் ஐபிஎஸ் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஐபிஎஸ் ஆலோசனையின்படி, பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல்ரகுமான் வழிபாட்டுதல்படி இன்ஸ்பெக்டர் தனபாலன் வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு குட்கா, புகையிலை,மது தீமைகள் பற்றி விளக்கி கூறினார்.

மேலும் தலைமைக் காவலர் விமலாம்பாள் மாணவிகளுக்கு சுய பாதுகாப்பு, தீயவர்களிடமிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது, பெண்கள் பாதுகாப்பு எண்கள்181 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098, பள்ளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண் 14417 பற்றிய விழிப்புணர்வை தலைமைக் காவலர் விமலாம்பாள் மாணவிகளுக்கு விளக்கி கூறினார். இதில் காவலர்கள், பள்ளித்தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 March 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!