/* */

குடிநீரில் மனிதக்கழிவை கலந்தவர்களை கைது செய்ய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

அந்த கிராமத்தைச் சார்ந்த 4 பெண்கள் திங்கள்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

குடிநீரில் மனிதக்கழிவை கலந்தவர்களை கைது செய்ய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
X

தலித் மக்களுக்கான குடிநீரில் மனிதக்கழிவை கலந்த கயவர்களை உடனடியாக கைது செய்ய  வலியுறுத்தி ஆட்சியர் கவிதாராமுவிடம் மனு அளித்த ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள். உடன் எம்எல்ஏ- சின்னத்துரை

புதுக்கோட்டையை அடுத்த இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீருக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த கயவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென அனைத்திந்ததிய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயில் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்தியச் செயலாளர் பி.சுகந்தி, மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.சலோமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசீலா, தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமையன்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த மனிதாபிமானமற்ற செயலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மேற்படி கிராமத்தில் தீண்டாமைகளைக் கடைப்பிடித்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்தையும், காவல்துறையையும் ஜனநாயக மாதர் சங்கம் பாராட்டுகிறது. அதே நேரத்தில் சம்பவம் நடத்து ஒருவார காலமாகியும் குடிநீர்த் தொட்டியில்; மலம் கலந்த கொடியவர்கள் கைது செய்யப்படவில்லை. உடனடியாக அவர்களை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பயன்படுத்தும் நீர் நிலைகளை சேதப்படுத்தினால் அல்லது மாசுபடுத்தினால் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 3(1) (ஓ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கும் ஏற்பாடு உள்ளது. மலம் கலக்கப்பட்ட குடிநீரை குடித்த அனைவருக்கும் இச்ச சட்ட பிரிவின்கீழ் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

இந்நிலையில், அந்த கிராமத்தைச் சார்ந்த 4 பெண்கள் திங்கள்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அந்த கிராமத்தில் மருத்துவ முகாமை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அக்கிராமத்தில் பொது தண்ணீர் தொட்டியிலிருந்து பழைய குழாய் இணைப்பின் வழியாகத்தான் இதுவரை குடிநீர் வழங்கப்படுகிறது. உடனடியாக புதிய குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட வேண்டும். 1986-ல் கட்டப்பட்ட மேற்படி தலித் மக்களின் வீடுகள் மிகக் கடுமையாக சேதமடைந்து குடியிருக்க தகுதி இல்லாதவைகளாக உள்ளன. எனவே தமிழக அரசு புதிய வீடுகளை கட்டித் தருவதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கிராமங்களில் தீண்டாமை கொடுமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதற்கென்று மாவட்ட ஆட்சியர் உருவாக்கிய வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த ஒரு வார காலத்தில் 50-க்கும் மேற்பட்ட தீண்டாமைப் புகார்கள் வந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய தலையீடு செய்து தீண்டாமையை கடைப்பிடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு, பாதிக்கப்பட்டதலித் மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு ஆணையம் தன்னுடைய பணியை தீவிர படுத்த வேண்டியுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள தீண்டாமை பிரச்னைகள் வெளியே வந்த பின்பு மட்டுமே அரசு தலையிடுவது ஏற்புடையதல்ல. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை ஆணையம் கூட்டப்பட வேண்டும். தலித் மக்கள் மத்தியில் தீண்டாமை கொடுமைகள் குறித்து கேட்டு அறிந்து தலையீடு செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 4 Jan 2023 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு