/* */

புதுக்கோட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடும் பணி துவக்கம்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம்
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் முதல்கட்ட பணியை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்.

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி வழி உள்ளாட்சி அமைப்புக்கள் வாாியாக ஒதுக்கீடு செய்யும் முதல் கட்டப் பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சியருமான கவிதா ராமு துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினிவழி உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக ஒதுக்கீடும் செய்யும் முதல்கட்டப் பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சியருமான கவிதா ராமு துவக்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 2 நகராட்சிகளும் இதேப்போல் மாவட்டத்தில் ஆலங்குடி அன்னவாசல் இலுப்பூர் கரம்பக்குடி கீரமங்கலம் கீரனூர் மற்றும் பொன்னமராவதி ஆகிய 8 பேரூராட்சிகளும் உள்ளது.

இதில் அறந்தாங்கி நகராட்சியில் 16 ஆயிரத்து 573 ஆண் வாக்காளர்களும் 18 ஆயித்தி 065 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 34 ஆயிரத்து 638 பேர் வாக்காளர்கள் உள்ளனர்.

இதேபோல் புதுக்கோட்டை நகராட்சியில் 60 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்களும் 64 ஆயிரத்து 984 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் ஒரு லட்சத்தி 25 ஆயிரத்து 669 வாக்காளர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய இரண்டு நகராட்சிகளையும் சேர்த்து மொத்தம் ஆண் வாக்காளர்கள் 77 ஆயிரத்து 741 பேரும் பெண் வாக்காளர்கள் 83 ஆயிரத்து 49 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 307 வாக்காளர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய இரண்டு நகராட்சிகளையும் சேர்த்து 60 ஆண் வாக்குச்சாவடி மையங்களும் 60 பெண் வாக்குச்சாவடி மையங்களும் இருபாலரும் பயன்படுத்தக்கூடிய வகையில் 39 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 159 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதேபோல் மாவட்டத்திலுள்ள 8 பேரூராட்சிகளில் 61 ஆண் வாக்குச்சாவடி, 61 பெண் வாக்குச்சாவடி மையங்களும் இருபாலரும் பயன்படுத்தக்கூடிய வகையில் 158 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளுக்க நடைபெற உள்ள உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலுக்காக மொத்தம் 280 வாக்குச்சாவடி மையங்களும். இதேபோல் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 777 ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 576 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் என மொத்தம் மாவட்டத்தில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 873 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் தற்போது வரை 45 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என முதல் கட்டமாக கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 6 Jan 2022 11:47 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...