/* */

பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்த தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புபடை பயிற்சி மையத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்றனர்

HIGHLIGHTS

பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்த தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து
X

பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்த புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையற்கலை கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்த புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையற்கலை கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்த ஆக்ஸ்போர்டு சமையற்கலை கல்லூரி மாணவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பேரிடர் காலங்களில் பேரிடரை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பேரிடர் ஏற்படும் காலங்களில் பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து சம்மந்தப்பட்ட இடங்களுக்கு விரைவாகச் சென்று பொதுமக்களை காப்பாற்றுவதற்காக உள்@ர் நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட நிருவாகத்தின் சார்பில் பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில், ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரி மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த ஒரு வார காலம், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புபடை பயிற்சி மையத்தில் பேரிடர் மேலாண்மை பட்டாலியன் 04-ல் பல்வேறு துறையை சேர்ந்த நிபுணர்களைக் கொண்டு பேரிடர் மேலாண்மை பயிற்சி வெற்றிகரமாக அளிக்கப்பட்டது.

வெற்றிகரமாக பயிற்சி முடித்த மாணவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாணவர் சமுதாயம் மூலம் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இன்றைய காலகட்டத்தில் சரியான வழிமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு தெரிவித்தார். இந்நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, கல்லூரி நிறுவனர் சுரேஷ், முதல்வர் ராதா மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

அரக்கோணத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான கடற்படை விமான தளம், ஐ.என்.எஸ். ராஜாளி, அதே விமானதளத்தில் இயங்கும் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி, தக்கோலம் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம், தேசிய பேரிடர் மீட்பு படை மையம் ஆகியவை உள்ளன. இந்தியாவில் அரக்கோணம், கவுகாத்தி, கொல்கத்தா, முண்டலி, புனே, காந்திநகர், பட்டின்டா, காசியாபாத், பாட்னா, குண்டூர், வாரணாசி, அருணாசலபிரதேசம் ஆகிய 12 இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை மையங்கள் செயல்பட்டு வருகிறது. நாட்டில் பல்வேறு இடங்களில் ஏற்படும் மழை, வெள்ளம், புயல், பூகம்பம், நிலநடுக்கம், சுனாமி, ரெயில் விபத்துகள் போன்ற பேரழிவில் இருந்து மக்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

தெற்கு மண்டலத்தில் அரக்கோணம், முண்டலி, புனே, குண்டூர் ஆகிய மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களுக்கு இடையிலான மீட்பு கருவிகளை விரைவாக பயன்படுவதற்கான மண்டல அளவிலான பல்வேறு போட்டிகள் அரக்கோணம் அருகே தக்கோலம் அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.


Updated On: 30 Nov 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!