/* */

தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிலாளர்கள்

தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேல்நிலைத்தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர் கள், தூய்மைக் காவலர்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத் (சிஐடியு) தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார்.கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், துணைத் தலைவர்கள் சி.அன்புமணவாளன், எஸ்.யாசிந்த், துணைச் செயலாளர்கள் சி.மாரிக்கண்ணு, ரெத்தினவேல் உள்ளிட்டடோர் பேசினர்.

மேல்நிலைத்தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர் கள், தூய்மைக் காவலர்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியா ளர்களுக்கு 31 விழுக்காடு அகவிலைப்படியை இணைத்து புதிய ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.தூய்மைக் காவலர்களுக்கு மகளிர் குழு மூலம் சம்பளம் வழங்குவதைத் தவிர்த்து ஊராட்சி நிர்வாகம் மூலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத் தில் எழுப்பப்பட்டன.

Updated On: 19 April 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!