/* */

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பைக் : திருச்சி டிஐஜி ஆனி விஜயா வழங்கல்

தமிழக அரசின் உத்தரவுபடி அனைத்து சப் இன்ஸ் பெக்டர்களுக்கு திருச்சி மணடல டிஐஜி ஆனிவிஜயா வழங்கினார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் 22 பேருக்கு இருசக்கர வாகனங்களும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேரிகார்டு, ஒளிரும் சமிக்ஞை விளக்கு, ஒளிரும் ஜாக்கெட், போக்குவரத்து சாதன உபகரணங்கள், சூரிய ஒளி விளக்குகள் ஆகியவற்றை இன்று திருச்சி மண்டல டிஐஜி ஆனி விஜயா புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சமூக இடைவெளியுடன் காவல் அதிகாரிகளுக்கு வழங்கினார்..

இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கீதா, ஜெரினாபேகம், ராஜேந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், ராஜகோபால் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்துகொண்டனர்..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மண்டல டிஐஜி ஆனி விஜயா கூறும் பொழுது,

'தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள முழு ஊரடங்கி பொதுமக்கள் முறையாக பின்பற்றி வருகிறார்கள் அதேபோல் காவல்துறையினருக்கும் பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பு நல்கி வருகிறார்கள்.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகிறார்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றும் இளைஞர்களுக்கு காவல்துறையினர் கொரோன வைரஸ் தொற்றை பற்றி எடுத்துக் கூறி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த அளவில் பாலியல் குற்றங்களுக்கு அதிக அளவில் தண்டனைகள் வழங்கி வருவது மகிழ்ச்சியை தருகிறது.

தொடர்ந்து பாலியல்ரீதியான குற்றங்களை தடுக்கும் விதத்தில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஊரடங்கு காலகட்டத்தில் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

தங்கள் குழந்தைகளுக்கு அவர்களுடைய திறமையை வளர்க்கும் விதத்தில் அவர்களுக்கு பல்வேறு வகையில் பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள பண்டைய கால வைத்தியமான பாட்டி வைத்தியங்களை நாம் பின்பற்ற வேண்டும்.

முறையாக கை கழுவுதல் பழமையான வைத்திய முறைகளைப் பின்பற்றுதல் உள்ளிட்டவைகளை கடைபிடித்தாலே வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

தமிழக அரசு அறிவித்துள்ள முழ ஊரடங்கை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். திருச்சியில் காவல் துறையினர் 80 சதவீதம் அளவில் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.' என்று கூறினார்.

Updated On: 11 May 2021 8:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்