/* */

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு வழங்க அ.தி.மு.க. வேட்பாளர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் உரிய பாதுகாப்பு வழங்க அ.தி.மு.க. வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

வாக்கு எண்ணும் மையத்தில்  பாதுகாப்பு வழங்க அ.தி.மு.க. வேட்பாளர்கள் கோரிக்கை
X

புதுக்கோட்டையில் மனு கொடுப்பதற்காக அ.தி.மு.க. வேட்பாளர்கள் வந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளுக்கு 19 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவான வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இந்நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று காலை தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணாவை ரோஜா இல்லத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தபால் வாக்கு பணியினை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். தாமதமின்றி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு உடனடியாக வெற்றி பெற்ற வேட்பாளர் பெயரை அறிவித்து சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையின் போது நீதிமன்ற உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் நடத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய 16வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் அப்துல் ரஹ்மான்

தேர்தல் பார்வையாளர் நாங்கள் கொடுத்த மனுவை பெற்றுக்கொண்டு முறையாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று உறுதி கூறியுள்ளதாக கூறினார்.

Updated On: 21 Feb 2022 5:43 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  2. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  5. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  6. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி