/* */

பெரம்பலூரில் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட பகுதிகளை கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட பகுதிகளை கலெக்டர் ஆய்வு
X

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்குவதற்காக ,ரூ.35 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ள கருவியை  கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா பார்வையிட்டார். 

பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சியில் 4.00 மீட்டர் அகலத்தில், 1.205 கி.மீ. தொலைவிற்கு ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, 3.35 மீட்டர் அகலத்தில் 0.392 கி.மீ. தொலைவிற்கு ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி, 0.90 மீட்டர் அகலத்தில் 0.392 கி.மீ. தொலைவிற்கு வடிகால் அமைக்கும் பணி, ரூ.4.80 லட்சம் மதிப்பீட்டில் 5 சிறுபாலம் அமைக்கும் பணி, லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் 3.50 மீட்டர் அகலத்தில் 0.949 கி.மீ. தொலைவிற்கு ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி, 0.395 கி.மீ. தொலைவிற்கு ரூ.9.85 மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி, ரூ.3.95 லட்சம் மதிப்பீட்டில் 4 சிறுபாலம் அமைக்கும் பணி, பூலாம்பாடி பேரூராட்சியில் 3.75 மீட்டர் அகலத்தில் 2.997 கி.மீ. தொலைவிற்கு ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் மயான சாலைக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்படவுள்ளது.

மேலும் பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாக பகுதியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கவும் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரசின் அனுமதி இப்பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் மேலும் பல்வேறு அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் பாதாள சாக்கடை அடைப்புகளை மனிதர்கள் சுத்தம் செய்வதால் ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடையினை சுத்தம் செய்ய வாங்கப்பட்டுள்ள புதிய ரோபோவின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன், உதவி செயற்பொறியாளர்(பேரூராட்சிகள்) ந.விஸ்வநாதன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் தியாகராஜன்(குரும்பலூர்), சதீஸ் கிருஷ்ணன்(லப்பைக்குடிக்காடு), பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்