/* */

பெரம்பலூர்:குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்:குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது பற்றி போலீஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு) தலைமையில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மற்றும் கல்பாடி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசார கூட்டங்களை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், மேலும் உங்கள் பகுதியில் ஏதேனும் குழந்தை திருமணம் நடை பெற்றால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலக தொலைபேசி எண் 9498100690 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலை பேசி எண் 181 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 23 Sep 2021 4:33 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்