/* */

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு பாேலீசார் விழிப்புணர்வு

குழந்தைகளின் பாதுகாப்பு இலவச தொலைப்பேசி எண் 1098, பெண்களின் பாதுகாப்பு மற்றும் பிரச்சனைகளுக்கு 181 இலவச தொலைப்பேசி எண்.

HIGHLIGHTS

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு பாேலீசார் விழிப்புணர்வு
X

எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளி வளாகத்தில் புகார் பெட்டியினை வைத்த காவல் ஆய்வாளர். சி.சுப்ரமணியன் .

பெரம்பலூர் மாவட்டம், எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரம்பலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சுப்ரமணியன் மற்றும் அவரது குழுவினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தைகளுக்கு Good touch & Bad touch என்றால் என்ன என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தும், குழந்தைகள் எதிர்காலத்தில் எவ்வாறு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும்,

எதிர்பாராத பிரச்சனைகளை எவ்வாறு கையால்வது என்பது குறித்தும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் அதற்கான இலவச தொலைப் பேசி எண் 1098 என்பது குறித்தும், பெண்களின் பாதுகாப்பிற்கும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தகவல் தெரிவிக்க 181 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை குறித்தும், குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்கவும் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தவும் உங்களால் மட்டுமே முடியும் என குழந்தைகளிடம் மிகச் சிறப்பாகவும், எளிமையாகவும் கலந்துரையாடல் நடத்தினார்.

மேலும் காவல் ஆய்வாளர் சி.சுப்ரமணியன் அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளிடம் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் என்றால் தயக்கம் சிறிதும் இன்றி பள்ளி வளாகத்தில் தற்போது நான் வைக்கும் புகார் பெட்டியில் தங்களது புகார்களை கடிதங்களாக தெரிவிக்கலாம் எனவும் இரகசியம் காக்கப்படும் எனவும் கூறி புகார் பெட்டி ஒன்றை வைத்தார்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவினர் பெண்கள் பாதுகாப்பு அலகு பிரிவினர் மற்றும் சமூக நல அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர் எசனை கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Sep 2021 4:40 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்