/* */

செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா: பக்தர்கள் தரிசனம்

செட்டிகுளம் அருள்மிகு தண்டாயுத பாணி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்.

HIGHLIGHTS

செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா: பக்தர்கள் தரிசனம்
X

செட்டிகுளம் அருள்மிகு தண்டாயுத பாணி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளத்தில் அமைந்துள்ளது அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஸ்தலமான இத்திருக்கோவில் பல்வேறு சிறப்புகளை உடையது. மற்ற முருகன் கோயில்களில் முருகன் கையில் வேல் இருக்கும். ஆனால் இத்திருத்திருத்தலத்தில் வேலுக்கு பதிலாக செங்கரும்பு ஏந்தி நிற்பதால் "செங்கரும்பு ஏந்திய செந்தில் ஆண்டவர்" என்ற சிறப்பு பெயர் உண்டு. இதனிடையே கந்த சஷ்டி விழாவையொட்டி பிரமாண்ட முறையில் அபிஷேகம் நடைபெறும்.

கொரோனா பரவல் காரணமாக இவ்வாண்டு எளிமையாக நடைபெற்றது. சண்முகா யாகம் நடத்தப்பட்டு பல்வேறு மூலிகைப் பொருட்கள் யாக வேள்வியில் செலுத்தப்பட்டு ,அருள்மிகு தண்டாயுதபாணி மூலவர் சுவாமிகளுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி, விபூதி, பழவகைகள் மற்றும் கலச தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தோடு சிறப்பு பூஜைகளோடு மஹா தீபாரதனை நடைபெற்றது.

இந்த கந்த சஷ்டி விழாவில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பெரகம்பி, பொம்மனப்பாடி, சிறுவயலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா முழுக்கத்துடன் தரிசனம் செய்தனர்.

Updated On: 9 Nov 2021 1:59 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்