/* */

பெரம்பலூரில் தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வாயில் கருப்பு துணியைக் கட்டிக் கொண்டு தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம். நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்
X

பெரம்பலூர் அருகே உள்ள மலையாளப்பட்டி கிராமத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த பெரியசாமி என்பவர் கடந்த ஜன. 9 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெரியசாமியின் மனைவி மல்லிகா மற்றும் மகள்கள் இவரின் உடலை நல்லடக்கம் செய்ய உதவிகள் கேட்டும், வாரிசு சான்றிதழ், பணிப்பதிவேடு வழங்க கோரியும் மலையாளப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அங்கு முறையாக சான்றிதழ்கள் வழங்கப்படாததால் பெரம்பலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், வேப்பந்தட்டை வட்டாச்சியர் அலுவலகத்திலும் பல்வேறு கட்டமாக மனு அளித்துள்ளனர்.

ஆனால் இறந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு அரசின் எந்த ஒரு உதவிகளும் சென்றடையாததால் இந்த சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர் தொழிலாளர் கட்சியினர் மற்றும் மலையாளப்பட்டி தூய்மை பணியாளர்கள், இறந்தவரின் உறவினர்களும் இணைந்து இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வாயில் கருப்பு துணியைக் கட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மனு அளிக்க வந்தவர்களை அலைக்கழித்து முறையாக நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பியதோடு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் முறையாக வழங்கிட கோரியும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 26 April 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?