/* */

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் உதவி மையத்தை கட்டணமில்லா தொலைப்பேசி எண் 181 மற்றும் 112 தொடர்பு கொள்ளலாம்

HIGHLIGHTS

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
X

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதற்கான சட்டப்பிரிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் திரு.சுப்ரமணியன்.

பெரம்பலூர் மாவட்டம் , செல்லியம்பாளையம் கிராமத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின் படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ .ராதிகா மேற்பார்வையில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் , செல்லியம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணப்பாளர் ச.மணி தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன்( பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தடுப்பு பிரிவு) குழுவினரான, மாவட்ட ஆட்கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சுப்ரமணியன், தலைமை காவலர் சுகன்யா மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பட்டு ஆகியோர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், அவற்றிலிருந்து எவ்வாறு நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும்,

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் உதவி மையம் குறித்தும், அவற்றை தொடர்பு கொள்ள 181 மற்றும் 112 கட்டணமில்லாத தொலைப்பேசி எண் குறித்தும் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எத்தகைய சட்டப்பிரிவு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 4 Aug 2021 3:22 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்