/* */

நாமக்கல் மாவட்டத்தில் 8 கிராமங்களில் 29ம் தேதி பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 29ம் தேதி 8 கிராமங்களில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 8 கிராமங்களில் 29ம் தேதி பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
X

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் (பைல் படம்)

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 29ம் தேதி 8 கிராமங்களில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி வருகிற 29ம் தேதி வெள்ளிக்கிழமை மாவட்டத்தில் உள்ள 8 கிராமங்களில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

நாமக்கல் தாலுக்கா ஆவல்நாய்க்கன்பட்டி, சேந்தமங்கலம் தாலுக்கா அக்கியம்பட்டி, ராசிபுரம் தாலுக்கா அலவாய்ப்பட்டி, மோகனூர் தாலுக்கா சின்னபெத்தாம்பட்டி, கொல்லிமலை தாலுக்கா பைல்நாடு, திருச்செங்கோடு தாலுக்கா பைல்நாடு, பரமத்திவேலூர் தாலுக்கா அர்த்தநாரிபாளையம், குமாரபாளையம் தாலுக்கா படவீடு ஆகிய கிராமங்களில் 29ம் தேதி பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறும். இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களுடைய பட்டா மாறுதல் மற்றும் இதர கோரிக்கைகைளை மனுவாக அளித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்ககப்பட்டுள்ளது.

Updated On: 27 Oct 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!