/* */

பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வரும் 20ம் தேதி லட்சார்ச்சனை

பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி, நாமக்கல் ஸ்ரீ ஹயக்கிரீவர் சுவாமிக்கு வருகிற 20ம் தேதி லட்சார்ச்சனை பூஜைகள் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்  பெற வரும் 20ம் தேதி லட்சார்ச்சனை
X

பைல் படம்

நாமக்கல் ராமாபுரம்புதூரில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மற்றும் ஸ்ரீ ஹயக்கிரீவர் திருக்கோயில் உள்ளது. குதிரை முகம் கொண்ட ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் பெருமாள் கல்விக்கு அதிபதி மற்றும் தொழில்கள் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் தெய்வமாகும். இந்த கோயிலில் பள்ளி மாணவ மாணவிகள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டியும், தொழில் அபிவிருத்தியடையவும், வருகிற 20ம் தேதி புதன்கிழமை, காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

21ம் தேதி வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் ஹயக்கிரீவர் மகா யாகம் நடைபெறும். தொடர்ந்து சுவாமிக்கு பேனா, பென்சில் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெறும. அதைத்தொடர்ந்து 1 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

பெயர் பதிவு செய்துகொண்டு பூஜையில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட பேனா மற்றும் பென்சில் பிரசாதமாக வழங்கப்படும். பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் ஜெயராமபட்டர், சசிகலா மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.

Updated On: 12 April 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  8. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  9. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  10. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!