/* */

மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?

Masala Idli Recipe - இரவில் மீந்து போன இட்லி இருந்தால், மறுநாள் காலையில் மசாலா இட்லியாக செய்து சாப்பிடுங்கள். சுவையில் அசந்து போவீர்கள்.

HIGHLIGHTS

மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
X

Masala Idli Recipe - ருசியான மசாலா இட்லி  செய்தல் (கோப்பு படம்)

Masala Idli Recipe - இரவில் மீந்து போன இட்லி இருந்தால், மறுநாள் காலையில் மசாலா இட்லியாக செய்து சாப்பிடுங்கள். சுவையில் அசந்து போவீர்கள். இரவில் நிறைய இட்லிகள் செய்து மீந்து போய்விட்டது என்றால் அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை.

அப்படியானால் அந்த இட்லியை தூக்கிப் போடாமல் அதைக் கொண்டு சுவையான காலை உணவை செய்யுங்கள். பொதுவாக இட்லி மீந்து போனால் உப்புமா செய்வது தான் வழக்கம். ஆனால் இன்று மீந்து போன இட்லியைக் கொண்டு மசாலா இட்லியை செய்யுங்கள். இந்த மசாலா இட்லி மிகச்சிறந்த காலை உணவு மட்டுமின்றி, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். தக்காளி சட்னியுடன் இந்த ஒரு பொருளை மட்டும் எக்ஸ்ட்ரா சேர்த்துக்கோங்க. டேஸ்ட் செமயா இருக்கும்..

கீழே மீந்து போன இட்லியைக் கொண்டு செய்யக்கூடிய மசாலா இட்லியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்:

* மீந்து போன இட்லி - 6

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் - 1/2 கப்

* குடைமிளகாய் - 1/2 கப்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் - 5

* தக்காளி - 1 கப்

* உப்பு - சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

* பாவ் பாஜி மசாலா - 1/2 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்


செய்முறை

* முதலில் இட்லிகளை துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து வதக்கி, மேலே உப்பு தூவி, வெங்காயம் நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நொடிகள் வதக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். * தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து கிளறி, 1 நிமிடம் வதக்க வேண்டும்.

* பிறகு இட்லி துண்டுகளை சேர்த்து, மசாலாக்கள் இட்லியுடன் நன்கு ஒன்று சேரும் வரை கிளறி இறக்கி மேலே எலுமிசசை சாறு மற்றும் கொத்தமல்லியை தூவினால், சுவையான மசாலா இட்லி ரெடி..

Updated On: 29 April 2024 9:17 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  2. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  4. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  5. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க